"சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ
நால்வேறு தெருவினும் காலுற நிற்றர. "
-மதுரைக்காஞ்சி
வெள்ளம்
இயற்கைச்சமநிலையின் சீர்குழைவே வெள்ளம் எனினும் நாம் அதையும் எதிர்கொள்ள பழக வேண்டும். வெள்ளப்பெருக்கின்போது பெருமரங்கள் தன்னைத்தற்காத்துக்கொள்ளும் ஆனால் செடிகொடிகள், குறுமரங்கள் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்படும், கூடவே ஆநிரைகளும் வெள்ளத்தால் அடித்துச்செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நிலமும், நீரும்
- வெள்ளநீர் நம் விளைநிலத்தை ஊடறுத்துச்செல்லும்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது. ஊருக்கு வந்தது நமக்கும் என்கிற மனநிலைக்கு வரவேண்டுமே தவிர பார்த்துப்பார்த்து செதுக்கிய விளைநிலம் பாழ்பட்டுப்போவதை எண்ணி வருந்தக்கூடாது.
- வெள்ளம் கட்டுக்குள் வந்து நீர் வரத்து குறையத்துவங்கும்போது வெள்ளநீரில் நம் குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டும்.
- வெள்ளப்பெருக்குக்குப்பிறகான சேற்றுக்குளியலில் குழந்தைகளை ஈடுபடுத்துவதின் மூலம் எத்தனை இழப்புகளுக்குப்பின்னும் வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது என்கிற எண்ணத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்துதல் வேண்டும்.
"சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறறையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது !"
-பிரமிள்





