"சிறு கரும்  பிடவின்  வெண்தலைக்  குறும் புதல்
கண்ணியின்  மலரும்  தன்  நறும்  புறவில்,
தொடுதோற்  கானவன்  கவை  பொருத்தன்ன"

– அகநானூறு
ஆநிரையும், நீரும்
  • பண்ணையின் கட்டுமானத்தில் ஆநிரைகளின் கூடம் மேட்டுப்பாங்கான இடத்தில்தான் கட்டமைத்திருப்போம் எனவே வெள்ளத்தின்போது அவைகள் காக்கப்படும், கவலை கொள்ள வேண்டிய தேவையில்லை.
  • ஒரு வேளை அதையும்தாண்டி வெள்ளமேற்பட்டால் தாவரங்கள் அடித்துச்செல்லப்படும்போது வெறும் சாட்சியாக நின்று கவனித்தோமே அதேபோல் நம்மை மட்டும் நாம் தற்காத்துக்கொள்ள வேண்டும்.
  • வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது போக மீதமிருக்கும் ஆநிரைகளின்மீது கவனம் செலுத்தி பாதுகாத்திடல் வேண்டும்.

முதலுதவி

எத்தனை கொந்தளிப்பான வாழ்க்கை சூழலுக்கு இடையிலும் எப்படி நாம் உணவும் மருத்துவமும் எடுத்துக்கொள்கிறோமோ அதேபோல வெள்ளத்தில் சிக்குண்டு குற்றுயிரும் ,குலைவுயிருமாய் இருக்கிற ஆநிரைகளுக்கும் உணவும், முறையான மருத்துவமும் செய்து கொடுக்கும் மனப்பக்குவத்தைப்பெற வேண்டும்.

Close