"வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று."
-திருவள்ளுவன்
சாரல்
ஒரு இயற்கைவழி வேளாண்பண்ணையின் பொன்னான காலமென்றால் அது மழைத்தூரல் விழுந்துகொண்டேயிருக்கும் பொழுதுகள்தான். மழைக்காலத்திற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறைப்படுத்தியிருக்கும் பட்சத்தில் மழைத்தூரலின்போது பண்ணை வேலை இலகுவானது.
தாவர மேலாண்மை
- வேர்வழி உயிர் உரங்கள் கொடுப்பதற்கு ஏற்ற காலக்கட்டம்
- குறுமரங்கள் மற்றும் காய்கறி, பூச்செடிகள் கவாத்து செய்ய உகந்த காலம்.
- பயறு, சிறுதானியங்கள் விதைப்பதற்கும் ,விதைத்தபின் எழுகிற களையெடுப்பிற்கும் உகந்த காலக்கட்டம்.
"பெயல் புறந்தந்த பூங்கொடி முல்லை
கொகுமுகை இலங்கு எயிராக
நகுமே தோழி நறுந்தன காரே"
-குறுந்தொகை.





