"வம்பு   பெய்யுமால்  மழையே  வம்பன்று
காரிது  பருவம்  ஆயின்  ,வாராரே  நம் காதலர்"

-குறுந்தொகை
ஆநிரைகள் மேலாண்மை
  • சாரல் தொடரும் நிலையில் அயல் மகரந்தம் வெகுவாகக்குறையும். அப்போது தேனீக்களுக்கு உணவு வழங்குவதின் மூலம் தேனீக்கள் கலைந்துசெல்லாமல் பாதுகாக்க முடியும்.
  • ஆநிரைகளுக்குத்தேவையான பசுந்தீவனங்களை அறுத்தவுடன் அப்படியே கொடுத்துவிடாமல் மழைநீர் வடிய காத்திருந்து கொடுக்க பண்ணையில் ஆடு,மாடுகள் மகிழ்ந்திருக்கும்.
  • சாரலின்போது கட்டுத்தரையே கதியென்றிருக்கும் ஆநிரைகளின் கழிவுகளை அவ்வப்போது அகற்றுதல் நலம்.

வாகடம்

அவ்வப்போது ஏற்படும் சிறுசிறு நோய்க்கூறுகளை கண்டறிந்து உடனுக்குடன் கைமருந்துசெய்து ஆநிரைகளைக்காத்தல் அவசியம்.

Close