"ஆனைதுரப்ப அரவு உறை ஆழ்குழி
நாநவிர் பற்றுபு நாளும் ஒருவனோர்
தேனின் அழிதுளி நக்கும் திறந்தது
மானிடர் இன்பம் மதித்தனை கொள்நீ"
புறப்பாடு
நாம் மேற்கொண்டிருக்கும் தற்சார்பு வாழ்க்கை நிலைத்திருக்க வேண்டுமானால் கிராம கட்டமைப்பு இருக்க வேண்டும். கிராமக்கட்டமைப்பு இருக்க வேண்டுமானால் பல கிராமங்களை உள்ளடக்கிய வாரசந்தை உயிரோடிருக்க வேண்டும். நமது தற்சார்பு பண்ணை அமைந்திருக்கும் இடத்திலிருந்து சுமார் இருபது கிலோமீட்டருக்குள் ஒரு வாரசந்தை அமைந்திருக்குமேயானால் அது நம் பேறு. பண்ணையில் தினசரி விற்றதுபோகவும் உபரியாக விளைந்து நிற்கிற காய்கறி, கீரைகள், பழங்கள், பூக்கள், தேன் என்று எதுவாகினும் விற்கவும், நமக்குத்தேவைப்படுகிற வேறுசில பொருட்களை வாங்கவும் வாரச்சந்தை என்பது நிச்சயம் நாம் வாங்கி வந்த வரம்தான்.
சந்தைக்கு எடுத்துச்செல்லப்போகும் பொருட்களின் பொதிவு, வாகனம், சந்தையில் கடைவிரிக்கப்போகும்பொருட்களின் அளவு, சந்தையில் நாம் நுகரப்போகும் பொருட்களின் பட்டியல் என முந்தையநாளே தெளிவான திட்டமிடுதல் இருக்கும்போது அதிகாலையில் வாரசந்தையை நோக்கிய பயணம் நமக்கு இனிதாகும்.
-
சந்தையில் நாம் கடைவிரித்த பொருட்களை விற்பதைப்போல நமக்குத்தேவைப்படும்
பொருகளை வாங்குவதும் ஒருவித கலைதான் ஆரம்பத்தில் பேரம்பேச கூச்சமிருந்தாலும் போகப்போகப் நாமும் ந்தச்சூழலுக்குப்பழகியிருப்போம். - அவ்வப்போது பெய்கின்ற மழைநீரை வெளியேற்றிக்கொண்டே இருத்தல் வேண்டும்.
- வயல் வெளியிலிருந்து மழைநீரை வெளியேற்றும்போது 'உயிர்மண்' வெளியேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
புறப்பாடு
-
சந்தையில் நாம்
கடைவிரித்த பொருட்களை விற்பதைப்போல நமக்குத்தேவைப்படும்
பொருகளை வாங்குவதும் ஒருவித கலைதான் ஆரம்பத்தில் பேரம்பேச கூச்சமிருந்தாலும் போகப்போகப் நாமும் ந்தச்சூழலுக்குப் பழகியிருப்போம். - அவ்வப்போது பெய்கின்ற மழைநீரை வெளியேற்றிக்கொண்டே இருத்தல் வேண்டும்.
- வயல் வெளியிலிருந்து மழைநீரை வெளியேற்றும்போது 'உயிர்மண்' வெளியேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சந்தைப்படுத்துதல்
- சந்தையை ஒருங்கிணைக்கும் மனிதர்களிடம் ஒப்புதல் பெற்று சந்தைக்குநாம் செலுத்த வேண்டிய வரியையும் செலுத்திவிட்டு நமக்கு வழங்கப்பட்ட இடத்தினில்கடைவிரித்து விற்பனையைத்துவங்கலாம். நம்வீட்டில் கடைவிரித்து விற்பனை செய்வது போலல்ல வாரச்சந்தை. நம் பொருளின் தரத்திற்காக வீடுதேடி வந்து வாங்கும்போது நாம் வைப்பதுதான் விலை. ஆனால் சந்தையின் நிலை வேறு. சந்தைக்கென்று ஒரு விதி இருக்கும்.
- நாம் நம்முடைய பொருளை நல்ல விலைக்கு விற்றுவிட நினைக்க வாங்குபவர் மலிவான விலைக்கு கேட்க இப்படியே பேரம்பேசிப்பேசி இருவருக்கும் இடையில் ஏதோ ஒருபுள்ளியில் அப்பொருள் விற்றுதீரும் இடம் மிக உன்னதமானது. சந்தையை நாம் வாரந்தோறும் பழகப்பழக அந்த உன்னதம் நிரம்ப கிடைக்கப்பெறும் மனிதர்களாவோம்.
சந்தையை ஒருங்கிணைக்கும் மனிதர்களிடம் ஒப்புதல் பெற்று சந்தைக்குநாம் செலுத்த வேண்டிய வரியையும் செலுத்திவிட்டு நமக்கு வழங்கப்பட்ட இடத்தினில்கடைவிரித்து விற்பனையைத்துவங்கலாம். நம்வீட்டில் கடைவிரித்து விற்பனை செய்வது போலல்ல வாரச்சந்தை. நம் பொருளின் தரத்திற்காக வீடுதேடி வந்து வாங்கும்போது நாம் வைப்பதுதான் விலை. ஆனால் சந்தையின் நிலை வேறு. சந்தைக்கென்று ஒரு விதி இருக்கும்.
நாம் நம்முடைய பொருளை நல்ல விலைக்கு விற்றுவிட நினைக்கு வாங்குபவர் மலிவான விலைக்கு கேட்க இப்படியே பேரம்பேசிப்பேசி இருவருக்கும் இடையில் ஏதோ ஒருபுள்ளியில் அப்பொருள் விற்றுதீரும் இடம் மிக உன்னதமானது. சந்தையை நாம் வாரந்தோறும் பழகப்பழக அந்த உன்னதம் நிரம்ப கிடைக்கப்பெறும் மனிதர்களாவோம்.
சந்தையில் நாம் கடைவிரித்த பொருட்களை விற்பதைப்போல நமக்குத்தேவைப்படும் பொருகளை வாங்குவதும் ஒருவித கலைதான் ஆரம்பத்தில் பேரம்பேச கூச்சமிருந்தாலும் போகப்போகப் நாமும் அந்தச்சூழலுக்குப்பழகியிருப்போம்.
தற்சார்புக்குத்துணைபுரியும் பொருட்களான கத்தி, கடப்பாறை, அரிவாள், களைக்கொத்தி, மண்வெட்டி உள்ளிட்ட இரும்பு மற்றும் பலகைப்பொருட்கள்....
கோழிக்குஞ்சுகளைப்பாதுகாக்கும் பஞ்சாரம், மூங்கில் கூடை, ஆநிரைகளுக்குத்தேவையான கயிறு, கழுத்துமணி மற்றும் அடர்தீவனங்கள் என அனைத்துப்பொருட்களும் கிடைக்கும் வாரச்சந்தை ஒரு திருவிழாக்கோலம்தான்
"ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும்
ஒருவன் அறியாதவனும்,ஒருவன்
குணன் அடங்க,குற்றம் இலானும்,ஒருவன்
கணன் அடங்கக் கற்றானும்,இல்......."





