"ஈட்டலும் துன்பம்;ஈட்டிய ஒண்பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் ;காத்த
குறைபடின் துன்பம்;
கெடின்,துன்பம்;துன்பக்கு
உறைபதி மற்றைப் பொருள்"
கொள்முதல்
- சந்தையில் நாம் கடைவிரித்த பொருட்களை விற்பதைப்போல நமக்குதேவைப்படும் பொருட்களை வாங்குவதும் ஒருவித கலைதான் ஆரம்பத்தில் பேரம்பேச கூச்சமிருந்தாலும் போகப்போகப் நாமும் அந்தச்சூழலுக்குப்பழகியிருப்போம்.
- தற்சார்புக்குத்துணைபுரியும் பொருட்களான கத்தி, கடப்பாறை, அரிவாள், களைக்கொத்தி, மண்வெட்டி உள்ளிட்ட இரும்பு மற்றும் பலகைப்பொருட்கள்....
- கோழிக்குஞ்சுகளைப்பாதுகாக்கும் பஞ்சாரம், மூங்கில் கூடை, ஆநிரைகளுக்குத்தேவையான கயிறு, கழுத்துமணி மற்றும் அடர்தீவனங்கள் என அனைத்துப்பொருட்களும் கிடைக்கும் வாரச்சந்தை ஒரு திருவிழாக்கோலம்தான்
-
சந்தையில் நாம்
கடைவிரித்த
பொருட்களை
விற்பதைப்போல நமக்குத்தேவைப்படும்
பொருகளை வாங்குவதும்
ஒருவித கலைதான்
ஆரம்பத்தில் பேரம்பேச கூச்சமிருந்தாலும்
போகப்போகப் நாமும் அந்தச்சூழலுக்குப்
பழகியிருப்போம். - தற்சார்புக்குத்துணைபுரியும் பொருட்களான கத்தி, கடப்பாறை, அரிவாள், களைக்கொத்தி, மண்வெட்டி உள்ளிட்ட இரும்பு மற்றும் பலகைப்பொருட்கள்....
-
கோழிக்குஞ்சுகளைப்
பாதுகாக்கும் பஞ்சாரம், மூங்கில் கூடை, ஆநிரைகளுக்குத்தேவையான கயிறு, கழுத்துமணி மற்றும் அடர்தீவனங்கள் என அனைத்துப்பொருட்களும் கிடைக்கும் வாரச்சந்தை ஒரு திருவிழாக்கோலம்தான்
படையல்
கள்
கூழ்
மிளகு ரசம்.
பதநீர்
கரும்புச்சாறு
மோர்
சந்தையில் விற்க வேண்டிய பொருளை விற்று வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிய பின்பு வெகுமக்கள் கூடுமிடங்களில் சுவைமிகு உணவில்லாமல் எப்படி? ஆம் ஒவ்வொரு சந்தையிலும் விதவிதமான காரவகைகள், இனிப்பு தின்பண்டங்கள் கடைவிரித்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக சில சந்தைகளில் கிடாக்கறி விருந்து கடை விரித்திருப்பார்கள் நாம் அசைவப்பிரியர்களாக இருக்கிற பட்சத்தில் “இன்னைக்கு ஒரு பிடி” என்று சாப்பிடலாம்.
சாப்பிட்டுவிட்டு சந்தையைவிட்டு வெளியேறும்போது கையேந்தி நிற்கும் ஒருசில மனிதர்களை நாம் சந்திக்க நேரிடலாம். கை, காலெல்லாம் நல்லாத்தானே இருக்கு உழைச்சி சாப்பிட வேண்டியதுதானேன்னு கேட்காமல்….. ஆம்! அவர்களுக்கு கை, கால் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் வாங்கிச்சாப்பிட பணமில்லை. அந்தப்பணத்தைப்பெற பொருட்களைத்தருகிற நிலமில்லை. அந்த நிலத்தில் உழைத்து பாதுகாக்கிற குடும்பம் இல்லை. அந்தக்குடும்பம் தழைத்தோங்க சொந்தமும், பந்தமும் இல்லை. இத்தனையும் இருக்கிற நாம் அவர்களைக்கேவலமாக பேசுவது ஞாயமில்லைதானே! அவர்கள் கேட்பது நம் சொத்தை அல்ல. குறைந்தபட்சம் ஒரு வேளை உணவு அவ்வளவுதான். அதைக்கொடுத்துவிட்டு வெளியேறுவது தற்சார்புக்கு சிறப்பு தரும்.