"குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலமையால்
கல்வி யழகே அழகு"
-நாலடியார்
மறை
- மாறுவேடமிட்டு வரும் மருவச்ச எம்ஜியாரைப்போல.... நிலவுடைமை வேடமிட்டு வரும் முதலாளித்துவத்தின் நவீன கள்ளக்குழந்தைதான் மாதச்சந்தை.
- கடன் சொல்லவும், பொருட்களை கைமாத்தவும், பேரம்பேசவும் வாய்ப்புகளை வழங்காத மாத சந்தை
- குழந்தைகளுக்குத்தேவையான மரபு விளையாட்டுகளையும் ,மகளிருக்குத்தேவையான இனிப்பு வகைகள் மற்றும் மதிப்புக்கூட்டுப் பொருட்களையும், ஆடவர்களுக்குத்தேவையான ஆன்றோர் பெருமக்களின் பேருரைகளையும் உள்ளடக்கியதே மாநகரில் மாதந்தோறும் நிகழும் மாதசந்தை.
- மாதசந்தையின் வாடிக்கையாளர்கள் முதலாளித்துவத்தில் மூழ்கி முத்தெடுத்து முப்பது வயதுக்குள் முதுமையை எட்டியவர்கள் ஆதலால் அவர்களுக்கு பொருட்களின் தரத்தைவிட பொதிவுகளில் மினுமினுப்பும், கடைவிரிக்கப்போகும் உங்களின் பேச்சும், உடையும், வசீகரிக்கும் தன்மையுடையதாய் இருந்தாலன்றி சந்தையை நீங்கள் வெல்லமுடியாது.
மதிப்புக்கூட்டுப்பொருட்கள் விற்பனை
- சந்தை ஒருங்கிணைக்கும் மனிதர்களிடம் ஒப்புதல் பெற்றுக்கொண்டு கடைக்குத்தேவையான கட்டனத்தைசெலுத்திவிட்டு விற்பனையை துவக்கலாம்.
- இந்த நகரம் தந்த உழைப்பினழுத்தம் போக்கிக்கொள்ளத்தான் மாதத்திற்கொருமுறை நம் சந்தையை நோக்கி மக்கள் படையெடுத்து வருகிறார்கள் என்கிற புரிதல் நமக்கிருக்கிற பட்சத்தில் அவர்கள் எழுப்பும் ஒவ்வொரு சந்தேகங்களுக்கும் சிரித்த முகத்தோடு பதில் அளிக்க பழக வேண்டும்.
மாறுவேடமிட்டு வரும் மருவச்ச எம்ஜியாரைப்போல.... நிலவுடைமை வேடமிட்டு வரும் முதலாளித்துவத்தின் நவீன கள்ளக்குழந்தைதான் மாதச்சந்தை.
கடன் சொல்லவும், பொருட்களை கைமாத்தவும், பேரம்பேசவும் வாய்ப்புகளை வழங்காத மாத சந்தை
குழந்தைகளுக்குத்தேவையான மரபு விளையாட்டுகளையும் ,மகளிருக்குத்தேவையான இனிப்பு வகைகள் மற்றும் மதிப்புக்கூட்டுப்பொருட்களையும், ஆடவர்களுக்குத்தேவையான ஆன்றோர் பெருமக்களின் பேருரைகளையும் உள்ளடக்கியதே மாநகரில் மாதந்தோறும் நிகழும் மாதசந்தை.
மாதசந்தையின் வாடிக்கையாளர்கள் முதலாளித்துவத்தில் மூழ்கி முத்தெடுத்து முப்பது வயதுக்குள் முதுமையை எட்டியவர்கள் ஆதலால் அவர்களுக்கு பொருட்களின் தரத்தைவிட பொதிவுகளில் மினுமினுப்பும், கடைவிரிக்கப்போகும் உங்களின் பேச்சும், உடையும், வசீகரிக்கும் தன்மையுடையதாய் இருந்தாலன்றி சந்தையை நீங்கள் வெல்லமுடியாது.
"விழவுமலி மூதூர் வீதியும்,மன்றமும்
பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின்;
நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலோப்
பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈராக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆறறி மரபின் அறிந்தோர் செய்யுமின்"
-மணிமேகலை
"ஆடலின் அரவமும் அங்கைகொட்டி நெஞ்சுஉணப்
பாடலின் அரவமும் பணைமுழவு அரவமும்
கூடுகோலத் தீம்சுவைக் கோலயாழ் அரவமும்
வாடல்இல்ல ஓசையால் வைகல்நாளும் வைகிற்றே"
– சீவகசிந்தாமணி





