பூத்தாலும் காயா மரம் உள;நன்று அறியார்,
மூத்தாலும் மூவார், நூல் தேற்றாதார் ;பாத்திப்
புதைத்தாலும் நாறாத வித்து உள;பேதைக்கு
உரைத்தாலும் செல்லாது,உணர்வு......

                                            – சிறுபஞ்சமூலம்
கேளிக்கை நுகருதல்
  • சந்தைக்கு நம் குழந்தைகளை அழைத்துச்சென்றிருக்கும் பட்சத்தில் அங்கு நிகழும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் குழந்தைகளை பங்கேற்கச்செய்யலாம். நம்மால் மதிப்புக்கூட்டமுடியாத வேறு சில பொருட்கள் சந்தையில் கிடைக்கிற பட்சத்தில் அதை வாங்கிக்கொள்ளலாம்
  •  பாரம்பரிய மரபு உணவு என்கிற பெயரில் விதவிதமான வடிவங்களிலும், நிறங்களிலும் இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். இது உண்மையிலேயே ஆர்கானிக்தானா? இதை எப்படி தயார் செய்தீர்கள் என்று கேனைத்தனமான கேள்விகளை எழுப்புவதை விடுத்து அவற்றை எந்த ஆய்வுக்கும் உட்படுத்தாமல் அப்படியே நுகரலாம். ஆம்! நுகர வேண்டுமென்று முடிவெடுத்தபின்பு கேள்வி என்ன வேண்டிக்கிடக்கு?
கருனை

மாமிசத்துண்டுகளை நெய் அல்லது எண்ணெய்கொண்டு பொரித்தெடுக்கும் ஒருவகை உணவு.

வாட்டு

இறைச்சியில் மசாலா சேர்த்து தீயில் வாட்டி சமைக்கப்படும் ஒரு வகை உணவு.

வாடூன்

சமைத்ததுபோக மீதமாகும் மாமிசங்களை உப்பு, மஞ்சள் தடவி உப்பு கண்டம் போட்டு காய வைத்து பிறகு தேவைப்படும் நேரங்களில் சமையலுக்கு பயன்படுத்துவர். இந்த நுட்பம் மற்றெல்லாரையும் விட முல்லைநில பெண்களுக்கு கைவந்தகலை.

புழுக்கல்:

இறைச்சியை அவித்து சாப்பிடும் முறை

கொடை

சந்தை முடிந்து கிளம்பும்போது சந்தையை நுகர வந்த ஒருசில மனிதர்கள் நம்மை சூழ்ந்துகொண்டு தற்சார்பு குறித்தும், இந்த வாழ்க்கைக்குள் இருக்கும் வளமான வாய்ப்புகளை குறித்தும் கேள்வி  எழுப்பும்போது  உடனே நாம் ‘மந்திரத்தால் மாங்காயும், தந்திரத்தால் தேங்காயும் வரவழைப்போம் என்கிற தொனியில் பதிலளிக்காமல் இந்தப்பாதையில் உண்மையிலேயே சந்திக்கும் பிரச்சனைகளை பகிர்ந்துகொண்டு கடந்துவிட வேண்டும். காரணம் அவர்கள் அப்போது கேட்டார்கள்! இப்போது கேட்கிறார்கள்! இனியும் கேட்பார்கள்.! அவர்கள் அப்படித்தான். அவர்களால் அவ்வளவே முடியும்.

கள்
கூழ்
மிளகு ரசம்.
பதநீர்
கரும்புச்சாறு
மோர்

குலம் தரும் கல்வி கொணர்ந்து முடிக்கும்
அளந்த கிளைகள் அழிபசி தீர்க்கும்
நிலம்பக வெம்பிய நீள்சுரம் போகி
புலம்புஇல் பொருள்தர புன்கண்மை உண்டோ

 

-வளையாபதி
Close