"வளிபொரு மின்னொடு வான் இருள் பரப்பி
வளிவு உன்று கிளையொடு மேல்மலை முற்றி
தளிபொழி சாரல் ததர்மலர் தாஅய் "
– பதிற்றுப்பத்து
மழைக்குமுன்
மழையை வரவேற்கும் முகமாக மழைக்கு முன்பு வேளாண்விளைநிலம் மற்றும் ஆநிரைகளின் வாழ்விடம் அதன் உணவை உறுதிசெய்தல் நோய் ஏற்படின் அதற்குத்தேவையான மருத்துவத்தின் மூலப்பொருட்களான மூலிகைகளை சேகரித்து வைத்தல் போன்றவற்றில் ஈடுபடவேண்டும்.
நில மேலாண்மை
- கனமழையின்போது வரப்புகளை ஊடறுத்து நீர் வெளியேறாவண்ணம் வரப்புகள் பலமாக இருக்கிறாதா என்று பார்த்துக்கொள்ளுதல். ஒருவேளை பலவீனமாக இருக்கிறபட்சத்தில் கரைகளை பலப்படுத்துதல்.
- பண்ணையில் பொழிகிற மொத்த மழைநீரும் பண்ணைகுட்டைக்குசென்று சேரும் வழித்தடங்களை சீரமைத்தல்.
- வருடம் முழுவதும் நாம் குடிநீருக்காக பயன்படுத்தப்போகும் மழைநீர் சேகரிப்புத்தொட்டியை சுத்தம் செய்து வைத்தல்.
"'நனந்தலை உலகம் வளையி நேமியோடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை"
– முல்லைப்பாட்டு





