"பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர் பருகிக்
காலை வந்தன்றால் காரே"
– அகநானூறு
ஆநிரை மேலாண்மை
- ஆநிரைகளின் அடர் தீவனம் மற்றும் உலர்தீவனத்தை பாதுகாத்து வைத்தல்
- ஆநிரைகள் தங்குமிடம் உலவுமிடம் இரண்டையும்பழுது பார்த்து வைத்திடல்.
- கோழிகளின் மண் குளியலுக்குத்தேவையான மண் சேகரித்து வைத்தல்.
வாகடம்
- மழைக்காலங்களில் ஆநிரைகளுக்கு ஏற்படுகின்ற நோய் பரவலைத்தடுக்கும் முகமாக அந்த மருத்துவ முறைகளை தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.
- வாகடம் தயாரிப்பதற்குத்தேவையான மூலப்பொருட்கள் பண்ணையிலேயே காணப்படும். ஒரு வேளை பண்ணையில் இல்லாத பட்சத்தில் வெளியிலிருந்துதருவித்து வைத்துக்கொள்ளுதல் அவசியம்.