ரேச்சல் கார்சன் (1892 – 1960)

ரேச்சல் கார்சன்

முததாளித்துவ கட்டமைப்பில் உச்சம் பெற்ற அமெரிக்காவின் பென்சில் வேனியா மாகானத்தில் சுமார் அறுபது ஏக்கர்  பரப்பளவுகொண்ட ஒரு பண்ணை வீட்டில் அமைதியான சூழ்நிலையில் பிறந்திருந்தாலுங்கூட அவர் வளர வளர சுற்றுச்சூழல் மாசுபடுவதைக்குறித்த பார்வை கூர்மையடைந்துகொண்டே சென்றது ரேச்சல் கார்சனுக்கு

அந்தப்பார்வைக்கு கட்டியங்கூறும் வகையில் அவர் தேர்வு செய்து எடுத்த படிப்பும் சூழல் சார்ந்தது என்பதால் அவரது பார்வை மேலும் கூர்மையானது.

இந்த முதலாளித்துவத்தின் கோரப்பற்களுக்குள் சிக்கித்தவிக்கும் சூழல் மாசுகுறித்துகவலைப்பட்ட அவர் அதன் பாதிப்புகளை தொகுக்க ஆரம்பித்தார். அது ‘மௌன வசந்தம்’ என்கிற பெயரில் புத்தகமாக வெளிவந்தது. அதில் பூச்சிக்கொல்லி தெளிப்பதினால்  சுற்றுச்சூழல் எவ்வாறு பாதிக்கப்படுகிறதென்பதையும், அதற்கெதிராக மக்கள் ஒன்று திரள வேண்டிய அவசியத்தையும் ஒருசேரப்பேசுகிறது.

பூச்சிக்கொல்லிகளை எண்ணெய்கலந்து வான்வழியாக தெளிக்கும்போது சாவப்போவது பூச்சிகள் மட்டுமல்ல மனிதர்களும்தான் பூச்சிகள் சிறியவை ஆதலால் பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்டவுடன் சாகும். மனிதர்களாகிய நாம் சற்றே பெரிய பூச்சி ஆதலால் மெல்லச்சாவோம் என்று எச்சரித்தார்.

அவர் எச்சரித்ததுபோலவே கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் முந்திரிகாடுகளுக்குதெளித்த பூச்சிக்கொல்லிகளை சுவாசித்த கற்பினிப்பெண்களுக்கு பிறந்த குழந்தைகள் கண்ணிருக்கும் இடத்தில் காது, காது இருக்க வேண்டிய இடத்தில் மூக்கு என முகம் சிதைந்து ஒழுங்கீனமான குழந்தைகளாய் பிறந்தார்கள். எத்தனை எச்சரித்து பேசி என்ன செய்ய.? இத்தனை அழகான உலகத்தில் தங்கள் வாழ்க்கைமட்டும் சிதைந்து போனதை எண்ணி எத்தனை நாட்கள் மனமுருகி அழுதிருப்பார்கள். பூச்சிக்கொல்லிகளுக்கெதிராக போராடிய தாயே உன்னை நினைவேந்தும் இந்நாளில் ஒருபோதும் எங்கள் வாழ்நாளில் பூச்சிக்கொல்லியை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதி ஏற்கிறோம்.

Close