லாரி பேக்கர்( 1917 – 2007)

லாரி பேக்கர்

மூலப்பொருட்களில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று மனித உழைப்பு இல்லாமல் இயற்கையாக கிடைக்கும் ஓலை, தாள், இலை, கற்கள், மண் போன்றவை. மற்றொன்று இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களின்மீது உழைப்பைச்செலுத்தி அதன் மதிப்பு கூடியபின் கிடைக்கும் பொருள்.

இதில் கட்டுமானம் என்று வருகிறபோது இயற்கையாக கிடைக்கிற பொருட்களை வைத்து வீடு கட்ட அதில் நம்முடைய உழைக்கும் நேரம் மிகுந்து காணப்படும். மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களைக்கொண்டு கட்டுகிற போது உழைப்பு நேரம் சேமிக்கப்பட்டு நம் கற்பனைத்திறனை மேம்படுத்த உதவும்.

இயல்பிலேயே கட்டுமானதுறை படிப்பை தேர்வு செய்து படித்திருந்த லாரி பேக்கர் மேற்கண்ட இரண்டு முறைகளையும் பரிசோதித்து அதில் வெற்றியும் கண்டார். லாரிபேக்கர் தன் செயல்பாடுகளின் மூலம் இந்த உலகிற்கு விட்டுச்சென்ற செய்தி.

  • வீடுகள் என்பவை வெறும் பொருட்களால் குவித்து வைக்கப்பட்ட மலைகள் அல்ல. அவை உயிருள்ள மனிதர்கள் உலாவுமிடம் எனவே மனிதர்களைப்போல வீடும் சுவாசிக்க அனுமதியுங்கள்.
  • நீங்கள் வசிக்கப்போகிற வீட்டை நீங்கள் ஒருபோதும் கட்டவே முடியாது. மாறாக வீடானது தனக்குத்தேவையான இடம், சூழலுக்கேற்றார்போல அதுவே தன்னை வடிவமைதுக்கொள்ளும்’
  • ஒரு மரபு வீடுகட்டுவதற்கான மூலப்பொருட்களை அதிகபட்சம் ஐந்து கிலோமீட்டருக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல் அவசியம்.
  • ஒருதற்சார்பு வாழ்க்கைக்குத்தேவை யான அனைத்துக்கூறுகனையும் உள்ளடக்கிய அவரது கட்டுமான முறை இளம் தலைமுறையினரால் பெரிதும் ஈர்க்கபடுகிறதுஅடுத்த தலைமுறைக்குத்தேவையான கட்டுமான முறையை கல்வியாகவும், கட்டுமான எடுத்துக்காட்டாகவும் விட்டுச்சென்ற கோமானே உங்கள் பாதம் பணிகிறோம்.
Close