ஜேசி. குமாரப்பா (1892 – 1960)

ஜேசி. குமாரப்பா

இந்திய நிலம் முழுமைக்கும் சுதந்திர தாகம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்த வேளையில் சுதந்திரம் கிடைத்த பின்பு இந்த மண்ணும், மண்ணின் மைந்தர்களின் வாழ்க்கையும் என்னாவாகப்போகிறதென்ற கவலையோடு இருந்தார் ஜேசி குமாரப்பா.

ஆம், அவர் கவலைப்பட்ட திசையை நோக்கித்தான் நேரு பொருளாதாரம் இயங்கியது. அடர்த்தியான மக்கள் தொகை, அதனால் ஏற்பட போகும் கடும்பஞ்சம் அதனை எதிர்கொள்ள வேண்டுமானால் இரசாயன விவசாய முறையேசரியானது என படுஜோராக இந்தியா வளர்ச்சியை நோக்கி நகர்ந்தது.

ஆனால் ஜேசி. குமாரப்பா அவரது கொள்கையில் உறுதியாக இருந்தார். நிலைத்த பொருளாதாரம், ஆம் அதை அவர் கெட்டியாகப்பிடித்துக்கொண்டார். ஒரு நாட்டின் பொருளாதாரம் சீராக இயங்க வேண்டுமானால் அது கிராமப்புற பொருளாதாரக்கொள்கையினாலேயே முடியும்மென்று தொடர்ந்து அதற்காக உழைத்தார். இந்த உலகில் மனிதன் என்பவன் தனித்த உயிரினம் அல்ல. மாறாக எத்தனையோ கோடி உயிரினங்களில் அவனும் ஒருவன் அவ்வளவே. இயற்கையானது ஒன்றுக்கொன்று ஒத்திசைவாக வாழப்பழகியிருக்கிறது.அதனதின்  அலகுகளை மனிதன் சிதைக்காத வரை நமக்கு நிரந்தர பொருளாதாரம் சாத்தியமாகிறது. என்ற அவர் அதை நிறைவேற்றும் பொருட்டு கூட்டுப்பண்ணை வேளாண்முறை என்கிற கோட்பாட்டை முன்வைத்து உழைத்தார்.

கிராமப்  பொருளாதாரம் நிலைத்திருக்கவும், மண்ணின் வளம் தொடர்ந்து மேம்படவும்  ஜேசி. குமாரப்பா நினைவைப்போற்றுவோம்.

Close