சூ மேக்கர் ( 1911 – 1977)
சூ மேக்கர்
மனிதனின் வாழ்வு நலமாகவும், சீரானதாகவும் அமைய வேண்டுமெனில் மனிதர்கள் பொருளுற்பத்தியில் ஈடுபட்டே ஆக வேண்டும். பொருள் உற்பத்தியின் படிநிலைகளான மூலப்பொருள், கருவி, உழைப்பு இவை மூன்றும் அடிப்படையில் சிதையாவண்ணம் பார்த்துக்கொள்வது தற்சார்புக்கு சிறப்பு.
இவை மூன்றும் ஒன்றுக்கொன்று துணைபுரிந்து இணைந்துசெல்லும்போது பெரும்பாமை மக்கள் உழைப்பில் ஈடுபட்டுநகரும் ஒரு வாழ்க்கை முறை அமையும்.
இந்த மூன்றிலும் கைவைத்து எளிமையான வாழ்க்கையை சிதைத்து மனிதனை பேராசை பிடித்த மிருகமாக மாற்றிய பெருமை முதலாளித்துவ கட்டமைப்பையேசாரும்.
ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவிற்கு மட்டுமே உத்திரவாதமுள்ள மனிதன் தன் அறிவையும், ஆற்றலையும் பயன்படுத்தி மூன்று வேளை உணவின் உத்திரவாதற்கு நகர்ந்தானென்றால் அதுவே அவனது வாழ்க்கையில் வெற்றி. பிறக்கும்போதே சுமார் நூறு கோடி ரூபாய் பெருமானமுள்ள சொத்துகொண்ட குடும்பத்தில் பிறக்கின்ற குழந்தையின் வாழ்க்கையில் எது வெற்றியாக இருக்க முடியும்? நிச்சம் அது பொருளுற்பத்தியை பொருத்த மட்டில் அந்த நூறு கோடியை ஆயிரம்கோடி ரூபாயாக மாற்றுவதுதான் வெற்றியாக இருக்க முடியும். வெற்றி என்கிற ஒரேயொரு வார்த்தையைச்சொல்லி மனிதனை மேலும், மேலும் நுகரக்கற்பித்தேகொண்டேயிருக்கும் இந்த பிரம்மாண்டம் ஒருநாள் வீழும் என்று எச்சரிக்கும் இவர் மேலும் சிறியதாக கட்டும்போது அழகாகவும், நீடித்து நிலைத்து வாழும் என்கிற தத்துவத்தை முன் வைக்கிறார். தமிழ் சமூகத்து முன்னோர்கள் “சிறுகக்கட்டி பெருக வாழ் ” என்று கற்பித்த வாழ்க்கை முறையை வேறொரு வார்த்தையில் ‘சிறியதே மிக அழகானது’ என்று சொன்னதின்மூலம் எங்கள் தற்சார்பு வாழ்க்கையின் நெஞ்சுக்கு நெருங்கி வந்தவனே உன்னை ஆரத்தழுவுகிறோம்.