பில் மொல்லீசன்(1928 – 2016)

பில் மொல்லீசன்

இளமையில் முறையான கல்வி கிடைக்கப்பெறாமல் வாழ்ந்திருந்தாலுங்கூட தன்னுடைய தொடர் பயணத்தினூடாகவும் பல்வேறு வேலை செய்ததினூடாக கிடைத்த அனுபவத்தின் வாயிலாககவும் ஒரு சிறந்த படைப்பாற்றல் கொண்ட மனிதராக வலம் வந்திருக்கிறார்.

முப்பது வயதுவரை வாழ்க்கை அதனதன் போக்கில் இயல்பாகச்செல்ல டாஸ்மேனியன் பள்ளத்தாக்கின் பயணம் இவரது ஒட்டுமொத்த வாழ்க்கையை புரட்டிப்போட்டிருக்கிறது.

அங்கே அவர்கண்டுகொண்ட தரிசனம் வேளாண்மையை ‘ஒரு வாழ்க்கை முறை என்னும் புள்ளியிலிருந்து மாற்றி தொழில்முறை வளர்ச்சியை நோக்கி நகர்த்தும்பொழுது அது பாரிய இழப்புகளை சந்திக்கிறது என்பதை உணர்கிறார்.

புதுப்பிக்கமுடியாத வளங்களை நுகருவதின்மூலம் நிலம், நீர், காற்று ஆகிய மூன்றும் பாழ்பட்டு நஞ்சுபாய்ந்த நிலமாகிறது. மேலும் உயிர்மண்ணாக இருக்கிற விளைநிலத்தின் மேல்மண் அகற்றப்படுவதால் பல்லுயிர்பெருக்கம் குறைகிறது என்பதை உணர்ந்த அவர் நிரந்தர வேளாண் வாழ்க்கை முறையை உலகிற்கு பறைசாற்றும் விதமாக பழைய மரபு அறிவோடு கொஞ்சம் புதுமையைக்கலந்து ‘பெர்மா கல்ச்சர்’ எனும் கோட்பாட்டை முன்வைத்து வேலைசெய்தார்

அதுஅவர் வாழ்ந்த  சமூகத்தில் நல்ல பலனை கொடுக்கவே அதை உலகம் முழுக்க எடுத்துச்சென்றார்.

அவர் இறந்துவிட்டார் என்கிற செய்தியைக்கேட்டவுடன்.

அவர் ஒருமுறை  நேர்காணலில் அளித்த பதில்தான் ஞாபகம் வந்தது. நான் இறந்துவிட்டேன் என்கிற செய்தி உங்களை வந்துசேரும்போது அதனை நம்பாதீர்கள். இந்த உலகில் ஏதோ ஒருமூலையில் தற்சார்பு வாழ்க்கை வாழும்  மனிதனின் ஒவ்வொரு  முயற்சியிலும் நான் வாழ்ந்து கொண்டிருப்பேன் என்று.

ஆம்! நீங்கள் சொன்னது உண்மைதான் எங்கள் முன்னத்தி ஏரே…!

ஆற்றல் இருப்புக்கொள்கையைப்பின்பற்றும்போதும்…

பல்கூறு வடிவமைப்பின்போதும்…..

ஆற்றல் மறுசுழற்சியின்போதும்…..

விளிம்புகளை முறையாக பயன்படுத்தி உயர் விளைச்சலைப்பெறும்போதும்…..

கடக்கவே முடியாத வாய்ப்புகளை உருவாக்கி எங்கள் வாழ்க்கையை மேலும் மேலும் வளமாக்கிக்கொண்டே செல்லும்போது எங்கள் கூடவே வருகிறீர்

Close