"எது ஒன்றையும் ஆய்வுக்குட்படுத்தி நல்லது கெட்டதை சீர்தூக்கிப்பார்க்கிற ஒரு புதிய தலைமுறை வருங்காலத்தில் உருவாகும்.அது என்னைவிட இந்த தற்சார்புக்களத்தில் இன்னும் வேகமாகப்பாயும்."
அரும்பு
நகரம் தந்த உழைப்பினழுத்தம் தீர எங்கேயாவது ஒரு வாரம் சென்று வந்தால் போதும். அதுவும் இயற்கை வாழ்வியல் சார்ந்த பயணமாக இருந்தால் நலமாக இருக்கும் என்று தேர்வு செய்வோரின் வடிவம் இது.
மொட்டு-ஒருமாதம்
வருடத்தில் ஒருமுறை கோடை விடுமுறையில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்போரின் வடிவம் இது.
மலர்-மூன்றுமாதம்
முழுவதுமாக தற்சார்புக்கு திரும்பி விடுவோமா? அல்லது தற்சார்பு பயணம் கொஞ்சம் நகர்ந்து பின் இடைநிறுத்தம் செய்யப்படுமா என்று தெரியவில்லை
பிஞ்சு-ஆறுமாதம்
ஏதோ தற்சார்பு சார்ந்து பயணிப்போம். பயணிக்கும் திசைகளில் பிரச்சனை ஏற்பட்டுவிட்டால் மீண்டும் நகரத்தின் கூடுகளுக்கே திரும்பி வந்துவிடுவோம்
காய்-ஒரு வருடம்
தற்சார்புக்குள் தனித்தியங்கும் எந்தத்துறையை தேர்வு செய்கிறோமோ அந்தத்துறையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி அதனை தனது வாழ்வியல் அடையாளமாக மாற்றிக்கொள்ள விரும்புவோரின் வடிவம் இது.
கனி- ஐந்துவருடம்
தற்சார்புக்குள் தனித்தியங்கும் துறைகளில் ஏதேனுமொரு துறையில் நிபுனத்துவம் பெறுவது மட்டுமில்லாமல் தற்சார்புக்குள் இயங்கும் அனைத்து துறைகள்சார்ந்தும் போதுமான அறிவைப்பெறுதலின் வடிவம் இது.