"பல்ஆ நெடுநெறிக்கு அகன்று வந்தென ,
புண்தலை மன்றம் நோக்கி ,மாலை
மடக்கண் குழவி அலம் வந்தன்ன"

             -குறுந்தொகை
ஆடுகள்
  • ஆடுகள் பெரும்பாலும் கறியின் தேவைகருதி மட்டுமே வளர்க்கப்படுகின்றன. எப்போதேனும் அரிதினும் அரியதாக மருத்துவத்தின் தேவை கருதி ஆட்டுப்பால் பயன்படலாம்.
  • ஆட்டுப்பண்ணை என்று வருகிறபோது இருபது பெட்டை ஆடுகளுக்கு ஒரு கிடா என்கிற அளவில் வைத்துக்கொள்ளும்போது பண்ணை மேலாண்மை எளிதாகும்.
  • ஆட்டு எருவிற்கு சந்தையில் எப்போதும் நல்ல கிராக்கி இருப்பதாலும், ஒரு அவசர பணத்தேவையின்போது உடனடி பொருளாதாரத்தை ஈட்டித்தருவதாலும் பண்ணையில் ஆடு வளர்ப்பு எப்போதும் சிறப்பைத்தரும்.மேற்கூறிய மூன்று காரணங்களை உள்ளடக்கிய வண்ணம் ஆடுகளை சந்தையிலிருந்து வாங்கி வந்து வளர்க்கலாம்.

ஆடுகள் பெரும்பாலும் கறியின் தேவைகருதி மட்டுமே வளர்க்கப்படுகின்றன. எப்போதேனும் அரிதினும் அரியதாக மருத்துவத்தின் தேவை கருதி ஆட்டுப்பால் பயன்படலாம்.

ஆட்டுப்பண்ணை என்று வருகிறபோது இருபது பெட்டை ஆடுகளுக்கு ஒரு கிடா என்கிற அளவில் வைத்துக்கொள்ளும்போது பண்ணை மேலாண்மை எளிதாகும்.

ஆட்டு எருவிற்கு சந்தையில் எப்போதும் நல்ல கிராக்கி இருப்பதாலும், ஒரு அவசர பணத்தேவையின்போது உடனடி பொருளாதாரத்தை ஈட்டித்தருவதாலும் பண்ணையில் ஆடு வளப்பு எப்போதும் சிறப்பைத்தரும்.மேற்கூறிய மூன்று காரணங்களை உள்ளடக்கிய வண்ணம் ஆடுகளை சந்தையிலிருந்து வாங்கி வந்து வளர்க்கலாம்.

பறவையினங்கள்

  • தற்சார்பு பண்ணையைப்பொருத்த வரைக்கும் கோழியினங்களில் சிறுவிடை பொருத்தமானதாயிருக்கும்.
  • முட்டைக்காக. மட்டும் கோழி வளர்பென்றால் பத்து பெட்டைக்கு ஒரு சேவல் என்கிற அளவிலும், கோழிகளை பல்கிப்பெருக்க வேண்டுமென்றால் ஐந்து பெட்டைக்கு ஒரு சேவல் என்கிற அளவிலும் வைத்துக்கொள்ளுதல் சிறப்பைத்தரும்.
  • இவை தவிர வான்கோழிகள், வாத்து, புறா, கின்னிக்கோழிகள் என அனைத்துமே இன்று சந்தையில் கிடைக்கப்பெறுகிறது. நமது பண்ணையின் மேலாண்மை வசதி மற்றும் இட வசதியைப்பொறுத்து அவற்றையும் வாங்கி வந்து வளர்க்கத்துவங்கலாம்.

தற்சார்பு பண்ணையைப்பொருத்த வரைக்கும் கோழியினங்களில் சிறுவிடை பொருத்தமானதாயிருக்கும்.

முட்டைக்காக. மட்டும் கோழி வளர்பென்றால் பத்து பெட்டைக்கு ஒரு சேவல் என்கிற அளவிலும், கோழிகளை பல்கிப்பெருக்க வேண்டுமென்றால் ஐந்து பெட்டைக்கு ஒரு சேவல் என்கிற அளவிலும் வைத்துக்கொள்ளுதல் சிறப்பைத்தரும்.

இவை தவிர வான்கோழிகள், வாத்து, புறா, கின்னிக்கோழிகள் என அனைத்துமே இன்று சந்தையில் கிடைக்கப்பெறுகிறது. நமது பண்ணையின் மேலாண்மை வசதி மற்றும் இட வசதியைப்பொறுத்து அவற்றையும் வாங்கி வந்து வளர்க்கத்துவங்கலாம்.

கள்
கூழ்
மிளகு ரசம்.
பதநீர்
கரும்புச்சாறு
மோர்

"தையல் துயர்க்குத் தறியாதம் மிறகால்
கையால் வயிறலைத்து காரிருள் வெய்யோனை
வாவுபரித் தேரேறி வாவென்றழைப்பது போல்
கூவினவே கோழிக்குலம்"

– புகழேந்தி
Close