"அமர்க்கண் ஆமான் அம்செவிக் குழவி
கானவர் எடுப்ப வெரீஇ,இனம் தீர்ந்து
கானம் நண்ணிய சிறுகுடிப் பட்டென,
இளையர் ஓம்ப மரீஇ அவண் நயந்து
மனைஉறை வாழ்க்கை வல்லியாங்கு,
மருவின் இனியவும் உளவோ?"
மருவுதல்
- ஆதியில் வேட்டையாடி உணவின் தேவையை பூர்த்தி செய்துகொண்டிருந்த நாம் காட்டு விலங்குகளைப்பழக்கி அவற்றை நம் வாழ்வியலோடு இணைத்துக்கொண்டோம்.
- அதிலும் குறிப்பாக உலகம் முழுமைக்கும் பரவிவாழும் உயிரினங்களில் வெறும் பதினாறு வகையான உயிரினங்களை மட்டுமே மனிதனால் வசப்படுத்த முடிந்தது.அவற்றில் எவைஎவையெல்லாம் நம்முடைய தற்சார்பு வாழ்க்கைக்கு துணைபுரியும் என்று யோசித்து அதை வளர்த்து பயன்பெற தற்சார்பு நிலைபெறும்.
ஆவினங்கள்
- தமிழகத்திற்கென்று பல வகையான மாட்டினங்கள் இருக்கின்றது.அதில் நம்முடைய நிலத்திற்குத்தேவையான இனம் எதுவோ அதை சந்தைகளில் தேர்வுசெய்து வாங்கலாம்.
- தற்போதைய முதலாளித்துவத்தின் கோரக்கரங்கள் பசுவினங்களின் பிறப்புறுப்புவரை நீள்கிறது. அவற்றின் கைகள் நம் பண்ணைவரை நீளாதிருக்க பொலிக்காளையொன்றை சந்தையிலிருந்து தருவித்து வளர்த்து வருதலின் மூலம் தடுக்க முடியும்.
- நிலத்தில் ஏறுபூட்டவும், மாட்டுவண்டி இழுக்கவும் பழக்கப்படுத்தப்பட்ட ஜோடிகள் சந்தையில் விற்பனைக்கு வரும். அவற்றில் நமக்கு பிடித்தமானதை பண்ணைக்கு வாங்கிவந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர தற்சார்பு வாழ்க்கை சிறப்புறும்.
தமிழகத்திற்கென்று பல வகையான மாட்டினங்கள் இருக்கின்றது.அதில் நம்முடைய நிலத்திற்குத்தேவையான இனம் எதுவோ அதை சந்தைகளில் தேர்வுசெய்து வாங்கலாம்.
தற்போதைய முதலாளித்துவத்தின் கோரக்கரங்கள் பசுவினங்களின் பிறப்புறுப்புவரை நீள்கிறது. அவற்றின் கைகள் நம் பண்ணைவரை நீளாதிருக்க பொலிக்காளையொன்றை சந்தையிலிருந்து தருவித்து வளர்த்து வருதலின் மூலம் தடுக்க முடியும்.
நிலத்தில் ஏறுபூட்டவும், மாட்டுவண்டி இழுக்கவும் பழக்கப்படுத்தப்பட்ட ஜோடிகள் சந்தையில் விற்பனைக்கு வரும். அவற்றில் நமக்கு பிடித்தமானதை பண்ணைக்கு வாங்கிவந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர தற்சார்பு வாழ்க்கை சிறப்புறும்.
அடிசில்:
அக்காரம் என்றால் கற்கண்டு அல்லது கரும்பு வெல்லம் இவற்றைக்கொண்டு செய்வது அக்கார அடிசல்.... நெய் சேர்த்து செய்தால் நெய்யுடை அடிசில்.... பால் சேர்த்து செய்தால் பாலுடை அடிசில்... இப்படி அடிசிலில் பலவகை இருந்தாலும் குழைவாக ஆக்கிய நெல்லரசிச்சோறு என்று பொதுப்பெயரில் அழைக்கப்படுவதுமுண்டு.
கலவை:
சோற்றுடன் வேறுசில பொருட்கள் சேர்த்து சமைக்கப்படும் உணவே கலவையுணவு. எகா. புளியோதரை சாதம், கறிவேப்பிலை சாதம், தக்காளிசாதம்.
கும்மாயம்:
கும்மாயம் என்பது வேகவைத்த பருப்பு. இவற்றை உளுந்து பாசிப்பயறுமாவு, நெய், பனங்கருப்பட்டி சேர்த்து ஒரு வகை இனிப்பு பலகாரமாகவும் செய்யலாம்.
மூரல்:
சரியாக வேகாத சோறு விதைவிதையாய் இருக்கும். நன்றாக வெந்துவிட்டால் குழைந்துபோகும். இரண்டிற்குமிடையில் சரியான பதத்தில் இருந்தால் குழம்பு கூட்டி சாப்பிட இதமாயிருக்கும் சோறு மூரல் எனப்படுகிறது
மோதகம்:
கற்கண்டை இளக்கிப்பாகாக்கி செய்யப்படும் ஒருவகைக்கொழுக்கட்டை.
களி:
கொதிக்கின்ற நீரில் மாவைச்சிறிது சிறிதாகச்சேர்த்துக்கலக்க வேண்டும். அது கெட்டிபடும் நிலை வரும்போது துடுப்புகொண்டு நன்றாக கிண்ட களி தயாராகும். எகா: கேப்பைக்களி, உளுந்தங்களி, வெந்தையக்களி.
நுவணை:
கம்பு, கேழ்வரகு, சாமை, சோளம், குதிரைவாலி, தினை உள்ளிட்ட சிறுதானி மாவுடன் இனிப்பு கலந்து செய்யப்படும் ஒருவகை இனிப்புருண்டை.





