"நிலத்துக்கு அணிஎன்ப நெல்லும் கரும்பும்;
குளத்துக்கு அணிஎன்ப தாமரை; பெண்மை
நலத்துக்கு அணிஎன்ப நாணம்; தனக்கு அணியாம்
தான்செல் உலகத்து அறம்"
-
-நான்மணிக்கடிகை.
தினசரி விற்பனைப்பொருட்கள்
காய்
காயுமில்லாத, பழமுமில்லாத இடைப்பட்ட பருவத்திலிருக்கும் கொய்யாவின் உதைக்காயையும், புளிப்பும், துவர்ப்பும் கலந்த கலாக்காயையும், உடல் வலிமையை உறுதி செய்திடும் முருங்கைகாயையும் மக்கள் எப்போதும் விருப்பபட்டியலில் வைத்திருக்க அதை தோட்டத்திலிருந்தே நேரடியாக சந்தைப்படுத்தலாம்.
கனி
அந்ததந்த காலக்கட்டத்தில் விளைகிற மா, பலா பப்பாளி, மாதுளை உள்ளிட்ட கனிகளையும் வீட்டிலிருந்தே சந்தைப்படுத்தலாம்.
பூக்கள்
தற்சார்புத்தோட்டத்தில் பூச்சியியல் மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கும் பூக்கள் அனைத்தும் மக்களின் விருப்பப்பட்டியலில்தான் இருக்கிறது எனவே அவற்றையும் நேரடியாக சந்தைப்படுத்தலாம்.
ஈகை
நமது தோட்டத்தின் தரமான பொருட்களின் தன்மையை உணர்ந்துகொண்ட மக்கள் வெறும் உணவுப்பண்டத்திற்காக மட்டுமில்லாது எப்போதாவது மருத்துவத்தின் தேவைகருதி காய், பூ, வேர், பட்டை, பால், முட்டை என கேட்டு வந்து நின்றால் தயங்காமல் கொடுத்து உதவும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
கள்
கூழ்
மிளகு ரசம்.
பதநீர்
கரும்புச்சாறு
மோர்
"செல்வர்யாம் என்று செல்வுழி எண்ணாத
புல்லரி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில்
கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும்.
– நாலடியார்