மசானுபு ஃபுக்கோகா( 1913 – 2008)

மசானுபு ஃபுக்கோகா

உலகின் அதிவேக வாழ்க்கைமுறைச்சூழலுக்குள் சிக்கியிருக்கும் ஜப்பானிய மண்ணிலிருந்து நிதானத்தைகடைப்பிடித்து வாழும் ஒரு எளிமையான வாழ்க்கை முறையை போதித்த பெருந்தகை பூக்காகோ.

தன் இன மக்களைப்போலவே வேகமாக சென்று கொண்டிருந்த பூக்காகோ ஒருநாள் ஏனிந்த வேகம்? யாருக்காக இந்த ஒட்டம் என்று நின்று நிதானித்ததின் சிந்தனை அவரை இயற்கை வேளாண்மையின் பக்கம் திசைதிருப்பியது. ஒவ்வொரு முறையும் விளைநிலத்தில் தன்னையும் பொருத்திக்கொண்டு இவர் மேற்கொண்ட பரிசோதனை முயற்சியின் விளைவால் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ எனும் வேளாண் வாழ்க்கை முறையைச்சொல்லும் புத்தகத்தை வழங்கினார்.

இன்றைக்கு பெரும்பாண்மையாகப்பேசப்படும் உழவில்லா வேளாண்மை அவர் இந்த உலகிற்குத்தந்த மிகப்பெரிய கொடை. ஒரு மனிதன் தன் வாழ்நாளில்  ஒரே ஒருமுறை வேளாண்மை செய்திருக்காவிட்டாலும்,  ஒரேயொரு முறை ஒரு மரத்தை நட்டு வளர்த்திருக்காவிட்டாலுங்கூட,  விதைப்பந்துகளை உருவாக்கி தூவிச்செல்லுவதின் மூலம் ஒரு பறவைக்கு இணையான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுப்போகமுடியுமென்பதை இந்த உலகிற்கு ஒருசெய்தியாக கொடுத்துச்சென்று பறவையே உன்னை வணங்குகிறோம்.

Close