"நளி கடல் முகந்து செறிதக இருளி
கனை பெயல் பொழிந்து"
-நற்றினை
அடை மழை
“ஆடு, மாடு இல்லாதவன் அடைமழைக்கு ராஜா” என்பது பழமொழி. காரணம் அடைமழையின்போது மேய்ச்சல் சாத்தியமில்லை தவிர தொற்று நோய் எளிதில் பரவும். நோயுற்ற ஆநிரைகளை உடனுக்குடன் அகற்றவோ, அல்லது மருந்துவம் பார்த்து காத்திடாவிட்டால் மொத்த முதலும் கெடும். ஆனால் பண்ணை வளர்ப்பு ஆநிரைகளுக்கு அந்தக்கவலையில்லை. கொஞ்சம்கவனமாக களமாடினால் அந்தப்பழமொழியை காலாவதியாகச்செய்யலாம்.
இருத்தல் மேலாண்மை
- அடைமழைக்காலங்களில் பெய்யும் மழைநீரை வயல் வெளியிலிருந்து வெளியேற்றாவிட்டால் 'இருத்தல் ' உயிர்கள் மிகவும் சிரமப்படும்.
- அவ்வப்போது பெய்கின்ற மழைநீரை வெளியேற்றிக்கொண்டே இருத்தல் வேண்டும்.
- வயல் வெளியிலிருந்து மழைநீரை வெளியேற்றும்போது 'உயிர்மண்' வெளியேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
"மாமேயல் மறப்ப மந்தி கூரப்
பறவை படிவன வீழக் கறவை
கன்றுகோ ளொழியக் கடிய வீசிக்
குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பாணாள்"
-நெடுநல்வாடை





