"புல்லே னடைமுதல் புறவு சேர்ந்திருந்த
புன்புலச் சீறூர், நெல்விளை யாதே ;
வரகும் தினையும் உள்ளவை யெல்லாம்"

 
-புறநானூறு

பத்தாயம்

தற்சார்பைப்பொருத்த வரைக்கும் விதைகள் என்பவை விற்பனை பண்டம் அல்ல. மாறாக ஒரு வேளாண்குடிமகன் உழைப்பையும், வேளாண்சார்ந்த அறிவியல் தொழில்நுட்பத்தையும் கைமாற்றிக்கொள்வதைப்போல விதைகளும் ஒரு கைமாற்றிக்கொள்ளக்கூடிய ஒரு பொருள்தான். ஆனால் இந்த நவீன உலகத்தில் எல்லாமே விற்பனைதான் என்கிற பட்சத்தில் விதைகள் மட்டும் விதிவிலக்காகி விடுமா என்ன? எனவே அதுவும் விலைதான்.

முதல்முறை தோட்டம் அமைக்கும்போது வாங்கி வருகிற விதைகளை அடுத்தடுத்த போகத்தில் நம் கையிருப்பாகவே மிதமிஞ்சி காணப்படும். நமக்குத்தேவை அதை அடுத்த போகம்வரை கெட்டுப்போகாமல் பாதுகாத்து வைத்திருக்கும் தொழில்நுட்பம் மட்டுமே.

அந்த வருட தற்பவெப்ப சூழலுக்கேற்றார்போல நம்மிடம் மிதமிஞ்சிய விதைகளை விற்கவும், நமக்குத்தேவைப்படும் விதைகளை வாங்கவும் சிறந்த தளம், விதைத்திருவிழா.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு வரைக்கும்கூட ஆமை வேகத்தில் ஊர்ந்துகொண்டிருந்த இந்தத்திருவிழா இப்போது மாவட்டம்தோறும் மக்களால் ஒருங்கிணைக்கப்பட்டு படு ஜோராக முன்னேறிக்கொண்டிருக்கிறது

அந்தத்திருவிழாவில் நம்மையும் இணைத்துக்கொள்ள தற்சாப்பு வாழ்க்கையானது மேலும் சிறப்புகூடும்.

 

Close