"வானுற நிவந்த மேல்நிலை மருங்கின்
வேனிற் பள்ளி தென்வளி தரூஉம்
நேர்வாய்க் கட்டளை திரியாது திண்ணிலை
பேர்வாய்க் கதவம் தாழொடு துறப்ப"

-நெடுநல்வாடை

கட்டுமானம்

தோட்டம் அமைக்கும்போது நவீனத்தில் ஏதோவொரு வடிவத்தில் வீடு கட்டி குடியேறியிருப்போம். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல நாமும் ஒரு அழகிய மரபு வீடு கட்டிக்கொண்டு வாழ வேண்டுமென்கிற எண்ணம் தோன்றும் அது தவறல்ல. ஆனால் அதற்கு நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

கட்டுமான வகைகள்
குரம்பை

இயற்கையில் கிடைக்கப்பெறுகிற பொருட்கள் அல்லது நாம் உணவு உற்பத்தியில் ஈடுபடும்பொழுது கிடைக்கிற மூலப்பொருட்களைக்கொண்டு கட்டப்படுகிற எளிய குடிசை அமைப்பு.

ஓடு

மண் குழைத்து பக்கவாட்டுச்சுவர் எழுப்பி ஆசாரிகளை அழைத்து மர வேலைகள் செய்து மேற்கூரையாக ஓடு பரப்பி செய்யப்படும் ஒரு அமைப்பு

மரபு வீடு

வெளிமுற்றம் அல்லது உள்முற்றத்துடன் கூடிய வான்தோய் மாடத்துடன் கூடிய அழகிய நேர்த்தியான மரபு வீடு.

"உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தனே"

 

                                            -திருமந்திரம்

Close