"பருவம் வாரா அளவை நெரிதரக்
கொம்பு சேர் கொடியிணர் ஊழ்த்த
வம்ப மாரியை காரென மதித்தேதி
-குறுந்தொகை
வெள்ளம் வடிந்த நிலம்
- சமஉயர வரப்புகள் உடைக்கப்பட்டு 'உயிர்மண்'வெளியேறியிருக்கும்.
- அதிகப்படியான மண் அரிப்பின்மூலம் மரங்களின் வேர் தன்னிலை மறந்திருக்கும்.
- அசைந்தாடும் பறவைகள் கூட ஆங்காங்கே உறைந்துபோய் உட்காந்திருக்கும்.
சமைத்ததுபோக மீதமாகும் மாமிசங்களை உப்பு, மஞ்சள் தடவி உப்பு கண்டம் போட்டு காய வைத்து பிறகு தேவைப்படும் நேரங்களில் சமையலுக்கு பயன்படுத்துவர். இந்த நுட்பம் மற்றெல்லாரையும் விட முல்லைநில பெண்களுக்கு கைவந்தகலை.
மீள்கட்டுமானம்
- வெள்ளத்தில் சேதமடைந்த நிலத்தை உடனே போர்க்கால அடிப்படையில் மீட்டாக வேண்டும்.
- உடனே சமஉயர வரப்புகளைசீர்செய்து விளைநிலத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவருதல் வேண்டும்.
- ஒடிந்த கிளைகளை கவாத்து செய்து இழந்த மரங்களை மீண்டும் கன்று வாங்கி நடுதல் வேண்டும்.