"மடவாழி  மஞ்சை  மாயினம்
கால மாரி பெய்தென ஆதெனதின்
ஆலறு மாலின பிடவும் பூத்தன"

– குறுந்தொகை

மழைக்குப்பின்

மழைக்குப்பிறகான காலங்களில் மண்ணில் புதிய வகை புல் பூண்டுகளும்முளைத்திருக்க அவற்றுக்கிடையில் நிறையவே பூச்சியினங்களும் உலாவரத்துவங்கியிருக்கும். அந்தப்பூச்சியினங்களின் வகைகளைக்கொண்டே அந்த வருடக்கோடை எவ்வாறு அமையும் என்பதைக்கனித்துவிட முடியும்.

பருவமழைய உள்வாங்கிய நிலம்

  • சரியான அளவில் மழையை உள்வாங்கிய நிலத்தில் தழைச்சத்து புதுப்பிக்கப்பட்டிருக்கும்.
  • சமஉயர வரப்புகள் ஊடறுக்கப்பட்டு உடைபடாமல் மேலும் பலம் கூடியிருக்கும்.
  • தாவர வகைகள் செழித்து வளர்ந்து பண்ணையில் பல்லுயிர்ச்சூழல் பெருகியிருக்கும்.
"வான் முகந்த நீர் மலைப்பொழியவும்
மழைபொழிந்த நீர் கடலென பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல
நீரின்று நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர் பரப்பவும்
அளந்தறியா பல பண்டம்"
– பட்டினப்பாலை.
Close