"திப்பிலி தேன்மிளகு சுக்கினோ டிம்பூரல்
துப்பிலா ஆன்பால் தலைக்காடை ஒப்பில்லா
வெந்நீரும் வெண்ணையு மெய்ச்சாந்தும் பூசவிவை
மண்ணூழி வாழும் மகிழ்ந்து"
பெரும் பொழுதாள்தல்
முந்தையநாள் பொங்கிய சோறு மீதமானால் அதில் புதிய நீரையோ அல்லது வடிதண்ணீரையோ ஊற்றி கைகளால் கிளறிவிட்டுத்தூங்குவோம். அந்தச்செயலுக்குப்பின் இருப்பது ஆக்கிய சோற்றை வீணடிக்கக்கூடாது என்கிற சிக்கனம் மட்டுமல்ல இரவில் தூங்குகிற நாம் காலையில் பிழைத்துக்கிடந்தால் குடித்துக்கொள்ளலாம் என்கிற நம்பிக்கையும்தான்.
ஆனால் இவையிரண்டையும்மீறி இன்னொரு மேஜிக் நிகழ்ந்திருக்கும் கஞ்சியில். அது கைகளால் கிளரும் தன்மை, தண்ணீர் சேர்க்கும் அளவு, தண்ணீரும் சோறும் கலந்திருக்கும் காலம் இம்மூன்றும்தான் அதன் ருசியைத்தீர்மானிப்பது.அதைத்தான் நாம் கைப்பக்குவம் என்கிறோம்.
அது தொல்குடியாக வாழ்ந்து வந்ததுமுதல் வழிவழியாக நம் வீட்டுப்பெண்கள் வரை வந்துசேர்ந்திருக்கிறது. தற்சார்பு வாழ்க்கையை மேற்கொண்டிருக்கும் குடும்ப ஒன்றுகூடலின்மூலம் அவரவர் தோட்டத்தில் கிடைக்கும் மூலப்பொருட்களை உணவாக, உடையாக, உறையூளாக, மருத்துவமாக என மதிப்புகூட்டி வாழும் கல்வியை கைமாற்றிக்கொண்டு நகர தற்சார்பு சிறக்கும்.
மழைக்குளியல்
மழைநீரில் பெருமளவு தழைச்சத்து நிறைந்து காணப்படுவதால் மழையில் நனைந்த ஆடு, மாடு உள்ளிட்ட ஆநிரைகள் புத்துணர்வு பெற்றும், மரம் செடி கொடிகள் கூடுதல் பச்சை கட்டியும் காணப்படும். சோம்பலில் இருக்கும் பூமியை அவ்வப்போது வந்து புத்துணர்ச்சியூட்டிச்செல்லும் அழையா விருந்தாளி வான்மழை.
அந்த விருந்தாளியை நாம் வரவேற்கும் முகமாக மழைக்குளியலில் ஈடுபடலாம். மழையில் நனைந்தால் சளி பிடிக்கும், காய்சல் வருமே என்று பயப்பட வேண்டாம். உடலிலிருந்து சளி வெளியேறுவதும், உடல் வருடத்திற்கு இருமுறை காய்ச்சல் காண்பதும் உடலின் நன்மைக்கே…
More Information:
- Minimum Age: 8 years
- Half Day Trip
- Available Year-round