"மதிசேர் ஆவின் மானத் தோன்றும்
மருதஞ் சான்ற மருதத் தண்பனை "
நிலவொளி ரசித்தல்
வருடம் முழுவதும் பகலில் அயராது உழைக்கிற நேரத்தில் அபரிமிதமான வெயிலைக்குடித்து வளருகிற நமது தோல் நிலவொளியை உள்வாங்குவதேயில்லை. ஆனால் நமது தோலானது நிலவொளியையும் அதன் மூலம் கிடைக்கிற நன்மைகளையும் பெற வேண்டுமென்பது ஓர் அடிப்படை விதி.
இப்படி விதி, அறிவியல் அப்படியெல்லாம் சொன்னால் நம் மக்கள் ஏற்றுக்கொள்ள தயங்குவர் ஆதலால் அதை இறை வழிபாட்டோடு பொருத்தினார்கள் நமது முன்னோர்கள்.
சும்மா சொல்லக்கூடாது அது இறைவழிப்பாட்டோடு தொடர்பு படுத்தியதினால்தான் தொடர்ந்து இப்போது வரை இயங்குகிறது.
அந்த வகையில் மாதந்தோறும் ஒவ்வொரு பௌர்ணமியின்போதும் விரதமிருந்து சாமி கும்பிடும்போது நம் வாழ்க்கை நலமாக இருக்கும் என்கிற நம்பிக்கையை விதைத்ததின் மூலம் மக்கள் வயிறு மாதத்திற்கொருமுறை சுத்தம் செய்யப்பட்டு நோயிலிருந்து விடுபட்ட வாழ்க்கைக்கு வழி வகுக்கிறது.
தற்சார்பில் தோட்டம் அமைத்து இயங்குவோர் கோவிலுக்கு செல்லமுடியாத சூழ்நிலையில் இருக்கும்பட்சத்தில் ‘பௌர்ணமி நிகழ்வை’ தோட்டத்திலே ஒருங்கிணைத்து கதைகள் பேசிக்கொண்டே முழு நிலவொளியை ரசிக்கலாம்.
அதிலும் குறிப்பாக இளவேனில், முதுவேனில் ஆகிய நான்கு மாதங்களும் முழுநிலவின் ஒளியை உள்வாங்குதென்பது வாழ்வின் பேராணந்தத்தில் ஒன்றென்றால் அது மிகையில்லை.