"காட்டைத்திருத்தி கழனியாக்கி
கழனியைத்திருத்தி கட்டிடங்களாக்கி
கட்டிடத்தின் மாடியில் தோட்டம் அமைத்து
காடுகள் குறித்து மிகத்தீவிரமாய் சிந்திக்கும்
நாகரீகக்கோமாளிகள் நாம்"

-பறவை பாலா

முற்றம்


புறவு அமைப்பானது முல்லை நில வாழ்வியலை முதன்மை படுத்தும் நோக்கத்தை கொண்டிருந்தாலும்கூட தமிழர் நிலப்பரப்பின் மற்ற தினைகளையும் சிறிது கவனத்தில் எடுத்துக்கொண்டு களமாடும்.

பயிற்சி மற்றும் மனிதவள மேம்பாடு

ஒரு இயற்கைவழி வேளாண்பண்ணை எப்படி இயங்க வேண்டும்? அதன் நீடித்த நிலைத்த வளர்ச்சிப்போக்கிற்கு எவ்வாறு துணைநிற்க வேண்டும்? பண்ணை வளர, வளர தன் அறிவு, ஆற்றல், ஆளுமை திறனும் கூடவே வளரும் என்பதைப்புரிந்து கொண்டு செயல்பட வைத்தல். அதற்கு தன்னை எப்படி தயார்செய்து கொள்ள வேண்டும் என்கிற பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சியின் சிறப்பம்சங்கள்

  • உடற்பயிற்சி
  • நீச்சல் பயிற்சி
  • விறகடுப்பு சமையல்
  • வேளாண் உத்திகள்
  • சிறுபொழுது சிறப்பித்தல்
  • பெரும்பொழுது பழகுதல்

தரிசு நிலங்களை மேம்படுத்தி புதிய பண்ணைகளை உருவாக்குதல்

 சிலருக்கு வாகனம், வீடு, வீட்டிலுள்ள பொருட்கள்  என எதை நுகருவதாக இருந்தாலும் புதியதைத்தான் தேர்வு செய்வார்கள். அது எவ்வளவு காலதாமதமானாலும்கூட பரவாயில்லை நாங்கள் காத்திருக்கிறோம் என்கிற மனநிலையிலிருப்பார்கள். புதியனவற்றை விரும்புவர்களுக்கு ஒரு சிறப்பான தளம்.

புதிய பண்ணையின் சிறப்பம்சங்கள்

  • நஞ்சு பாயாத கன்னிநிலம்
  • நேர்த்தியான பாதை மற்றும் கட்டுமானம்.

ஆநிரை வளர்த்தலை ஊக்குவித்தல்

ஒரு இயற்கை வழி வேளாண்பண்ணையின்  நீடித்த நிலைத்த பயணத்திற்கு மிகவும் இன்றியமையாதவை ஆநிரைகள். நம்முடைய குடும்ப அமைப்பைப்போலவே ஆநிரைகளுக்கும் அதற்கேயுண்டானகுடும்ப ஒழுங்குமுறை இருக்கின்றது. அதை சிதைக்காவண்ணம் அவற்றை வளர்த்தெடுக்க ஊக்குவிப்பது

ஆநிரை வளர்த்தலின் சிறப்பம்சங்கள்

  • அந்தந்த பகுதி ஆநிரைகள் பல்கிப்பெருக வழிவகுக்கும்
  • பண்ணையின் நில ‘மறுசுழற்சி’ சீராக இயங்கும்.

கைவிடப்பட்ட பண்ணைகளை மீட்டுருவாக்கம் செய்தல்

சிலருக்கு வாகனம், வீடு, வீட்டிலுள்ள பொருட்கள் என  எதுவாகினும் உடனே வேண்டும் அதன் விலை குறித்த பார்வையோ, அழகியல் தன்மையின் குறைபாடோ எதைப்பற்றியும் கவலையில்லை. பழைய பண்ணையை வாங்குவதின் மூலம் நிறைய நேரத்தை சேமித்துக்கொள்ள முடியும் என்போருக்கானது பழைய பண்ணை.

பழைய பண்ணையின்  சிறபம்சங்கள்

நீர், மின்சாரம், உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றிக்கான மெனக்கெடல் இல்லாமை.

வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டுதல்

தாவர உற்பத்தி மற்றும் ஆநிரை உற்பத்தியைப்போலவே அதன் மூலம் கிடைக்கிற உபரியை மதிப்பு கூட்டி விற்கத்தெரிந்திருக்க வேண்டும் அப்படியானால்தான் ஒரு பண்ணையை நீண்ட காலத்திற்கு வெற்றிகரமாக இழுத்துச்செல்ல முடியும்.

மதிப்பு கூட்டுதலின் சிறப்பம்சங்கள்

  • வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டுவதின் மூலம் கிராமபுற மக்களின் வேலை வாய்ப்பை உறுதிசெய்யமுடியும்.
  • கிராமபுற மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய முடியும்.

இளவேனில்

சித்திரை வைகாசி

முதுவேனில்

ஆனி ஆடி

கார் காலம்

ஆவணி புரட்டாசி

கூதிர் காலம்

ஐப்பசி கார்த்திகை

முன்பனி காலம்

மார்கழி தை

பின்பனி காலம்

மாசி பங்குனி

மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதைவருஉ வளியும்
வளித் ததைஇய தீயும்
தீ முரணிய நீருமென்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல

– புறநானூறு

மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதைவருஉ வளியும்
வளித் ததைஇய தீயும்
தீ முரணிய நீருமென்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல

– புறநானூறு
Premium Rooms
0
Deluxe Suites
0
Private Chalets
0
Restaurants
0

சிறுபொழுதும், பெரும்பொழுதும்

நமக்கு வழங்கப்பட்ட வாழ்வு எந்தத்தினை  சார்ந்ததாக இருப்பினும் வாழ்தலின் நோக்கம் மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமே. அதற்குத்தடையாக வரும் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளப்பழகுவதே  அந்த தினை வாழ்வியலுக்கு நாம் செய்யும் மரியாதை.

கார்
கோடை
காலை
மாலை

"கொல்லைக் கோவலர் குறும்புனஞ் சேர்ந்த
குறுங்காற்  குரவின்  குவியிணர்  வான்பூ
ஆடுடை  இடைமகன்"

-நற்றினை
Close