"கமுகோடு தென்னை மரங்கள் குலைகொண்டு படுத்திருக்கும்
பழம்வெடித்து சுளைதெரியும் பலாமரங்கள் மேனியெல்லாம்
கன்னலோடு வாழைத்தோட்டம் காடுபோல் வளர்ந்திருக்கும்
கருங்குவளை மலர்களெல்லாம் கல்யாண இல்லமாக்கும்."

 
-நீலகேசி

சுற்றம்

நம்முடைய சுற்றமும், நட்பும் நாம் ஒன்றுகூடுவதற்கான சரியான காரணகாரியங்களை நம்மிடத்தில் சொல்லாதவரை அன்றாடத்தேவைகளாகக்காக ஒடிக்கொண்டிருப்போம்.

தோட்டம் அமைத்து தற்சார்பு வாழ்க்கைக்கு திரும்பிய பின்பு   நிலவொளியை உள்வாங்க ‘பௌர்ணமி நிகழ்வு” விதைகளைப்பகிர்ந்து கொள்ள விதைத்திருவிழா’ உணவு பற்றிய அறிவைப்பகிர்ந்துகொள்ள ‘உணவுத்திருவிழா ‘ நோய் குறித்த பார்வையில் தெளிவுபெற ‘மருத்துவ முகாம்’ என தேவை கருதி காரண காரியங்களை உருவாக்கி மனிதர்கள் ஒன்றுகூடுவது வழக்கம்.

 அன்றாடத்தில் சலிப்பேற்படும் தருணங்களில் மக்கள் ஒன்றுகூடுவதற்கான புதிய புதிய காரணத்தை தோற்றுவிக்கிறார்கள்.

தேவை கருதியோ, கருதாமலோ  ஒன்றுகூடுதலில் மட்டும் மக்கள்  மகிழ்ந்திருக்கிறார்கள் என்பது புலப்படுகிறது. ஆனால் இதே ஒன்றுகூடல் தற்சார்பு வாழ்க்கையில்  எந்த வகையில் இருக்க வேண்டுமென்பதை அந்தந்த திணை வாழ்க்கையே தீர்மானிக்கின்றன.

Close